
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியின் தொடக்க வீரர்கள் முகமது வாசீம் - விரிட்டியா அரவிந்த் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர்.
தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய முகமது வசீம் அரைசதம் கடந்து, 50 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 75 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அரவிந்தனும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, பின்னர் களமிறங்கிய பசில் ஹமீத் 3, ரோஹன் முஸ்தஃபா ரன்கள் ஏதுமின்றி ரஷித் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.