Advertisement
Advertisement
Advertisement

UAE vs NZ, 1st T20I: டிம் செய்ஃபெர்ட் அரைசதம்; யுஏஇக்கு 156 டார்கெட்!

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 17, 2023 • 21:11 PM
UAE vs NZ, 1st T20I: டிம் செய்ஃபெர்ட் அரைசதம்; யுஏஇக்கு 156 டார்கெட்!
UAE vs NZ, 1st T20I: டிம் செய்ஃபெர்ட் அரைசதம்; யுஏஇக்கு 156 டார்கெட்! (Image Source: Google)
Advertisement

நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சாத் பௌஸ் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாத் பௌஸ் ரன்கள் ஏதுமின்றியும், டேனெ கிளெவர் 4 விக்கெட்டுகளையும், மார்க் சாப்மேன் 15 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Trending


அதேசமயம் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த டிம் செய்ஃபெர்ட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் நீஷம் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இறுதியில் கோல் மெக்கன்ஸி - ரச்சின் ரவீந்திரா இணை அதிரடியாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்கன்ஸி 31 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 21 ரன்களையும் சேர்த்தனர். யுஏஇ அணி தரப்பில் ஜுனைத் சித்திக், பசில் ஹமீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement