
UK tour: KS Bharat roped in as cover for Saha (Image Source: Google)
இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, அதன்பின் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 20 பேர் அடங்கிய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் கூடுதலாக 4 வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, நேற்று தான் கரோனா தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.