
UK tour: Team India sweating it out in gym to be in best physical shape (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏற்கெனவே கரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.
மேலும் விராட் கோலி தலைமையிலான 24 பேர் அடங்கிய இந்திய அணி, காரோனா நெறிமுறைகள் காரணமாக கடந்த வாரமே மும்பை சென்று பிசிசிஐ விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.