
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசி தனது அபாரமான திறமை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் நிச்சயம் அவருக்கு அறிமுகம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் பயிற்சியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி இந்திய அணி கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசி ராகுல் டிராவிடின் கவனத்தை ஈர்த்துள்ளார்.