
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 65ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
இதனைத்தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் 5 வீரர்கள் பட்டியலில் உம்ரான் மாலிக் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.