
இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் இந்த ஆட்டத்தில் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் அறிமுகமானார்கள்.
முதலில் டாசில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு கில் மற்றும் சூர்யா இருவரும் ஏழு ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தார்கள். இசான் கிசான் 37 ரன்கள் ஹர்திக் பாண்டியா 29 ரன்கள் எடுத்து ஓரளவு அணியை மீட்டார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை 162 ரன்கள் எட்ட வைத்தார்கள். இவர்கள் 41 ரன் மற்றும் 31 எடுத்தார்கள்.
இதற்கடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகளை அறிமுக வீரர் சிவம் மாவி ஆரம்பத்தில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை எடுத்து ஆட்டம் இந்திய அணியின் பக்கம் வந்தது. ஆனால் இந்திய அணியுடன் சிறப்பாக விளையாடும் பழக்கத்தை வைத்துள்ள இலங்கை கேப்டன் சனகா திடீரென்று அதிரடியாக ஆட ஆரம்பித்து ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் போதும் என்று கடைசி கட்டத்தில் கொண்டு வந்து திடீர் அச்சத்தை ஏற்படுத்தினார்.