
Umran should partner Bumrah in T20 World Cup: Harbhajan Singh (Image Source: Google)
ஐபிஎல் சீசனில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர்தான் உம்ரான் மாலிக். ஐதராபாத் அணியை சேர்ந்த இவர் அதிவேகமாக பந்து வீசக்கூடியவர். இவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
உம்ரான் மாலிக் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “உம்ரான் மாலிக் எனக்கு மிகவும் பிடித்த வீரர். சிறந்த பந்து வீச்சாளரான அவரை இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். உம்ரான் மாலிக் அதிவேகப்பந்து வீச்சாளராக அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருக்கு அனைத்து திசைகளிலும் இருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.