
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், மீதமுள்ள இரு இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போட்டியில் சிஎஸ்கே வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நல்ல ரன் ரெட்டில் வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் 600 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன்கள் சேர்த்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார்.