
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளிலும் அமெரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அச்தியது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு எதிராக தங்களது முதல் முயற்சியிலேயே அமெரிக்க அணி டி20 தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேனான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹஸ்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தனர். அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் ஷயான் ஜஹான்கீர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய ஆண்ட்ரிஸ் கஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜாஹன்கீரும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 3 ரன்களுக்கும், மிலந்த் குமார் 7 ரன்களுக்கும், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இரண்டு ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியை நெருக்கடியில் தள்ளினர்.