
United States vs Ireland, Match 30 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் அயர்லாந்து அணி ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவினாலும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது. மறுபக்கம் அமெரிக்க அணியும் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியைப் பதிவுசெய்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.