
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறப்பு சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி! (Image Source: Google)
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நேற்று (மார்ச் 2) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இப்போட்டியில்10 ஓவர்களை வீசிய வருண் சக்ரவர்த்தி 42 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் நியூசிலாந்தின் முக்கிய வீரர்களான வில் யங், கிளென் பிலிப், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் மற்றும் மாட் ஹென்றி ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார்.
அதிவேக 5 விக்கெட்டுகள்