
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் இந்தப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் அவர் தனது பெயரில் பதிவுசெய்துள்ளார்.
மோசமான உலக சாதனையை
இப்போட்டியில் வருன் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த நிலையிலும் இந்திய அணி தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலும் அணி தோல்வியடைந்ததன் அடிப்படையில் முதல் பந்து வீச்சாளர் எனும் மோசமான சாதனை அவர் பெயரில் உள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வருண் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், ஆனால் அப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.