
இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் 38 அணிகளிடன் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும், ஜெய்தேவ் உனாத்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் பவன் ஷா 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த பச்சவ் 27, அங்கித் பாவ்னே 16, அஸிம் காஸி 37 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியிலும் சதமடித்து அசத்தினார்.