ரஞ்சி கோப்பை 2025: புதிய வரலாறு படைத்த ஹர்ஷ் தூபே!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் வரலாற்று சாதனையை விதர்பா அணியின் ஹர்ஷ் தூபே படைத்துள்ளார்.

விதர்பா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை 2024-25 இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் டாப் ஆர்டர் விரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 138 ரன்களையும், சதத்தை நெருங்கிய கருண் நாயர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 86 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கேரளா அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களையும், சதத்தை நெருங்கிய கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் விதர்பா அணி வீரர் ஹர்ஷ் தூபே 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார். அதன்படி நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் அவர் 10 போட்டிகளில் விளையாடி 7 முறை ஐந்து விக்கெட், 3 முறை நான்கு விக்கெட்டுகள் உள்பட் மொத்தமாக 69 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் பிகார் அணியின் அஷுதோஷ் அமானின் சாதனையை முறியடித்து ஹர்ஷ் தூபே புதிய சாதனை படைத்துள்ளார்.
Record Alert!
& counting...
Vidarbha's Harsh Dubey has broken the record for most wickets in a #RanjiTrophy season
He's picked up 69 wickets in the season so far, going past Ashutosh Aman's tally of 68@IDFCFIRSTBank
Scorecard https://t.co/up5GVaflpp pic.twitter.com/MsKiAnM8qG— BCCI Domestic (@BCCIdomestic) February 28, 2025Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக கடந்த 2018-19ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் பிகார் அணிக்காக விளையாடிய அஷுதோஷ் அமான் 8 போட்டிகளில் விளையாடி 9 முறை ஐந்து விக்கெட்டுகளையும், 3 முறை நான்கு விக்கெட்டுகள் உள்பட மொத்தமாக 68 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த பட்டியலில் 2019-20ஆம் ஆண்டு சீசனில் சௌராஷ்டிரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனாட்கட் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திலும், 1974-75ஆவது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய பிசன் சிங் பேடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் 4ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now