
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை குவித்தது.
அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 111 ரன்கள் மட்டுமே கஎடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் 11 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 18 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் குறிப்பிடவேண்டிய விசயம் யாதெனில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் மட்டுமே ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.