
VIDEO: Dravid Gives Kohli Batting Tips As Team India Have Their First Full Training Session In South (Image Source: Google)
இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி தென் ஆப்பிரிக்கா சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ரன் சேர்க்க முடியாமல் தவித்து வருகிறார்.
மேலும் இதன் காரணமாகவே அவர் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த தொடரில் அவர் தனது அதிரடியான ஆட்டத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.