டி20 உலகக்கோப்பை: விடியோ காலில் விராட், ரிஷப் - வைரல் காணொளி!
டி20 உலகக்கோப்பை குறித்து விராட் கோலியும் ரிஷப் பந்தும் வேடிக்கையாகப் பேசிக்கொள்ளும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: India's Kohli-Pant Indulge In Banter Ahead Of Warm Up Match Against England (Image Source: Google)
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர், கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களுக்கான விளம்பரமாக விராட் கோலி - ரிஷப் பந்த் இடையேயான வேடிக்கையான உரையாடல் கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.
அதில், விடியோ கால் மூலமாக ரிஷப் பந்திடம் விராட் கோலி பேசுகிறார். “ரிஷப், டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் தான் வெற்றியைத் தரும் - கோலி
கவலை வேண்டாம். தினமும் நான் பயிற்சி எடுக்கிறேன். ஒரு விக்கெட் கீப்பர் தான் உலகக் கோப்பையில் சிக்ஸர் அடித்து இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார் - ரிஷப் பந்த்
ஆமாம். ஆனால் தோனிக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. - கோலி
நான் தான் இந்தியாவின் விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
அணியில் ஏராளமான விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள். பயிற்சி ஆட்டங்களில் யார் விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம் - கோலி” என்று அக்காணொளி முடிகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021 இந்திய அணி அக்டோபர் 18 அன்று இங்கிலாந்தையும் அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் பயிற்சி ஆட்டங்களில் எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இரு ஆட்டங்களும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன..@imVkohli remembers @msdhoni while calling @RishabhPant17
— Star Sports (@StarSportsIndia) October 14, 2021
Learn why in Part 1 of #SkipperCallingKeeper & stay tuned for Part 2!#LiveTheGame, ICC Men's #T20WorldCup 2021:#INDvENG | Oct 18, Broadcast: 7 PM, Match: 7.30 PM#INDvAUS | Oct 20, Broadcast: 3 PM, Match: 3.30 PM pic.twitter.com/SLYXUQj75g
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News