
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா மற்றும் கருண் நாயர தலைமையிலான விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதரா நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கர்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய அனீஷ் கேவியும் 21 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இவர்களைத்தொடர்ந்து அணியின் கேப்டன் மயங்க் அகர்வாலும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மாறன் ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மாறன் ரவிச்சந்திரன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய கிருஷ்ணன் ஸ்ரீஜித்தும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிருஷ்ணன் ஸ்ரீஜித் விக்கெட்டை இழக்க, சதமடித்து அசத்திய ஸ்மாறன் ரவிச்சந்திரன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிரங்கிய அபினோவ் மனோஹர் தனது பங்கிற்கு 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்க்க கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்களைச் சேர்த்தது. விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே, நாச்சிகேத் பூதே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.