
Vijay Hazare Trophy: Tamil Nadu Beat Mumbai by 54 runs (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.
இதில் எலைட் பி குரூப்பில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் கேப்டன் ஜேகதீசன் 20, சாய் சுதர்சன் 24, பாபா இந்திரஜித் 45, வாஷிங்டன் சுந்தர் 34, தினேஷ் கார்த்திக் 32 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.