
Vijay Hazare Trophy: Yuvraj Singh, Bishnoi stunning century;Haryana beat Arunachal Pradesh by 306 ru (Image Source: Google)
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய லீக் ஆட்டத்தில் அருணாச்சல பிரதேச அணியும், ஹரியானா அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஹரியானா அணியில் ஓபனர்கள் சைதன்யா பிஷ்னோய் 134 (124), 18 வயதே ஆகும் இளம் வீரர் யுவராஜ் சிங் 131 (116) ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இதன்மூலம் ஹரியானா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்து அசத்தியது. அருணாச்சல பிரதேச அணி தரப்பில் யப் நியா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.