
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது கௌகாத்தியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிதீஷ் ரானா தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 19 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.