எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு - விராட் கோலி குறித்து டு பிளெசிஸ் ஓபன் டாக்!
ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான சீசனின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளை எடுத்துரைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விராட்டும் நானும் விளையாட்டைப் பார்க்கும் விதத்தில் அல்லது விளையாட்டைப் பற்றி சிந்திக்கும் விதத்தில் மிகவும் ஒத்ததாக இருக்கும் சில விஷயங்கள் உள்ளன.
Trending
அதில் வெளிப்படையாக கூறவேண்டும் எனில் நாங்கள் கடினமாக பயிற்சி, உடல் தகுதி, நன்றாக சாப்பிடுவது போன்றவை ஒத்ததாக இருந்துள்ளது. எனவே, ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக இருப்பதற்கான முழுமையான அணுகுமுறையை நாங்கள் பார்க்கிறோம், அதனால்தான் ஆர்சிபி அணிக்காக எனது முதல் சீசனில் நாங்கள் மிகவும் நன்றாக இணைந்து செயல்பட்டோம் என நினைக்கிறேன்.
விராட் கோலி ஒரு ஆச்சரியமானவர், அவர் கடினமாக பயிற்சி செய்கிறார், அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். மேலும் இன்றைய விளையாட்டு யுகத்தில் நீங்கள் நீண்ட ஆயுளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் அவரைப் போல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே இளைய தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பார். அவர்கள் உள்ளே வந்து தங்கள் திறமையை நம்பலாம்.
இப்போது உள்ள வீரகள் திறமையின் அடிப்படையில் போதுமானவர்கள் தான், ஆனால் அவர்கள் நீண்ட காலம் உடற்தகுதியுடன் விளையாடுவது உறுதிப்போடுத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து. ஃபாஃப் டூ பிளெசிஸ் அணி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now