
இந்தியா சமீபத்தில் பங்கேற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் அணியில் இடம் பெறாமல் போன யுவேந்திர சாஹல் தற்போது மீண்டும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான அணியின் இடம் பெற்றுள்ளார். இந்திய அணி புது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் முதல் போட்டியை சந்திக்க உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியில் கோலிக்கும், ரோஹித்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் குறித்து யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
சாஹல் கூறுகையில், “விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் கேப்டன் பொறுப்பைப் பொறுத்தவரையில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இரண்டு பேரும் சிறந்த கேப்டன்கள். கேப்டன்களாக இருவருக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லாததால் அணியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியாது.