Advertisement

ஐபிஎல் 2022: ஆல் டைம் லெவனை ஹர்பஜன் சிங்!

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முன்னாள் சுழல் ஜாம்பவானும், ஐபிஎல்லின் சிறந்த வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன் சிங், ஐபிஎல்லின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார்.

Advertisement
Virat Kohli and Rohit Sharma in Harbhajan Singh's MS Dhoni-led all-time IPL XI, legendary all-rounde
Virat Kohli and Rohit Sharma in Harbhajan Singh's MS Dhoni-led all-time IPL XI, legendary all-rounde (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 26, 2022 • 04:16 PM

ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவன் அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்கள் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். இவர்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறு இருவரை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதேபோலத்தான் 3ஆம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 26, 2022 • 04:16 PM

நான்காம் வரிசை வீரராக, எந்த வரிசையிலும் இறங்கி பேட்டிங் ஆடவல்ல ஷேன் வாட்சனையும், 5ஆம் வரிசையில் டி வில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக தோனியை தேர்வு செய்து, அவரையே ஐபிஎல் ஆல்டைம் லெவனின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். தோனி சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்தவர். 

Trending

ரோஹித்தும் மும்பை இந்தியன்ஸுக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தான் என்றாலும், தோனி கேப்டன்சியில் அவருக்கும் சீனியர் என்ற முறையிலும் சிறந்தவர் என்ற முறையிலும் தோனியை கேப்டனாக நியமித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங், ரோஹித் கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது, தோனி தலைமையில் சிஎஸ்கே கோப்பையை வென்றபோதும் அந்த அணிகளில் அங்கம் வகித்திருக்கிறார்.

ஆல்ரவுண்டர்களாக பொல்லார்ட், ஜடேஜா, சுனில் நரைன் ஆகிய இருவரையும், வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் சிறந்த ஐபிஎல் லெவன்: கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷேன் வாட்சன், டிவில்லியர்ஸ், தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, கைரன் பொல்லார்டு, சுனில் நரைன், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement