
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி -யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் வேளையில் இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? எந்த அணி கோப்பையை கைப்பற்றும்? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை பல நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிப்பார்கள் என்பது குறித்த தனது கருத்தை அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் முத்திரை பதிப்பார்கள் என்று கருதுகிறேன். அதேபோன்று ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகிய மூவருமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனாலும் மூன்று வடிவமான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடும் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளதால் அந்த அணிக்கு அதிக சாதகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.