
Cricket Image for டி20 கிரிக்கெட்டில் சாதனை மகுடம் சூடிய விராட் கோலி! (Image Source: twitter)
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலி, இஷான் கிஷான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 49 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசி 73 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் விராட் கோலி 73 ரன்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.