
2018ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்திய அணி ஐபிஎல் 15ஆவது சீசனுக்குப் பிறகு அட்டகாசமாக விளையாடி வருவதால், ஆசியக் கோப்பையிலும் கெத்துக்காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், வேறு வழியில்லாமல் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டார். இவர் ஜிம்பாப்வேக்கு எதிராக படுமோசமாக சொதப்பி ஷாக் கொடுத்தார். அதேபோல் கடந்த பிப்ரவரிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ராகுலும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக பெரிதளவில் சிறப்பாக செயல்படவில்லை. இதுவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் மற்றொரு பிரச்சினையும் மிகமுக்கியமானதாக இருக்கிறது. அது விராட் கோலியின் ஃபார்ம்தான். ஐபிஎல் 15ஆவது சீசனில் கோலி சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடர்களில் மட்டுமே பங்கேற்ற அவர், அதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது ஓய்வுக்கு சென்றார்.