
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ரஜத் படிதார் 26 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களையும், மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா அககியோர் தலா 24 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் கைல் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் விராட் கோலி 3 பவுண்டரிகளை அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.