Advertisement

தோனி உடனான தமது பிணைப்பு குறித்து மனம் திறந்த விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உடனான தனது பிணைப்பு குறித்து தற்போதுள்ள கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

Advertisement
Virat Kohli Describes His Bond With MS Dhoni In Two Words
Virat Kohli Describes His Bond With MS Dhoni In Two Words (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 30, 2021 • 04:02 PM

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டனாக பார்க்க படுபவர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இருவரும் தான். கடந்த 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியதை அடுத்து, அடுத்து வந்த டி20 உலகக் கோப்பைக்கு அனுபவமில்லாத இந்திய அணியை வழிநடத்தி கோப்பையைக் கைப்பற்றியது தோனி என்ற ஒரு தனிமனிதனின் சாமார்த்தியம் என்று தான் கூற வேண்டும். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 30, 2021 • 04:02 PM

அதேபோல் தோனி விட்ட இடத்தை விராட் கோலி சரியாக கைப்பற்றி சிறப்பாக இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். ஐசிசி நடத்திய கோப்பைகளை விராட் கோலி தலைமையில் இந்திய அணி கைப்பற்றவில்லை என்பதைத் தவிர மற்றபடி இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

Trending

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் பகுதியை தொடங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரசிகர் ஒவருர் மகேந்திர சிங் தோனி குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

உங்களுக்கும் தோனிக்கு இடையேயானா நட்பு குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விராட் கோலி, “நம்பிக்கை மற்றும் மரியாதை” என இரண்டே வார்த்தைகளில் பதிலளித்துள்ளார். விராட் கோலியின் இந்த பதிவானது தோனி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement