Advertisement

500ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி!

தனது 500ஆவது சர்வதேச போட்டியில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் நெருங்கியுள்ளார்.

Advertisement
500ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி!
500ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 21, 2023 • 10:55 PM

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இரண்டாவது முறையாக ஓபனிங் இறங்கினர். ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 100 பிளஸ் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதில் ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கில் 10 ரன்களுக்கு வெளியேறினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 21, 2023 • 10:55 PM

அரைசதம் கடந்த ரோகித் சர்மா 80 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி தன்னுடைய 500ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். இதில் அரைசதம் கடந்து, 500ஆவது சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்கிற வரலாறையும் படைத்தார். முதல்நாள் முடிவில் 288 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி. இதில் விராட் கோலி 86 ரன்கள், ஜடேஜா 36 ரன்கள் அடித்து களத்தில் இருந்ததனர்.

Trending

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய விராட் கோலி மற்றும் ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடியது. இதில் விராட் கோலி 76ஆவது சர்வதேச சதத்தையும் 29ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார். 11 பவுண்டரிகள் உட்பட 121 ரன்களுக்கு அவுட் ஆனார். 500ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்கிற வரலாறை படைத்துள்ளார் விராட் கோலி. இவருக்கு முன்னர் 9 வீரர்கள் 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். 

எவரும் தங்களுடைய 500ஆவது போட்டியில் அரைசதம் கூட அடித்ததில்லை. விராட் கோலி சதம் அடித்து அந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் இந்தியாவிற்கு வெளியே மைதானங்களில் தன்னுடைய 28ஆவது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் விராட் கோலி. வெளி மைதானங்களில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 29 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது விராட் கோலி அதனை நெருங்கி வருகிறார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement