
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்தஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ராஜ் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் பட்டிதாருக்கு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டிக்குப்பின் பேசிய ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி,“ ஐபிஎல் வரலாற்றிலேயே சர்வதேச போட்டிகளில் களமிறங்காத ஒருவீரர் நாக்அவுட் போட்டியில் சதம் அடிப்பது பட்டிதார் மட்டும்தான். நான் போட்டி முடிந்தபின் பட்டிதாரிடம் அவரின் பேட்டிங் குறித்து வெகுவாகப் பாராட்டினேன். அதில் நான் இதற்குமுன் நெருக்கடியான காலகாட்டத்தில் ஆடப்பட்ட பல இன்னிங்ஸ்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால், இன்று ரஜத் பட்டிதார் ஆடிய சிறந்த இன்னிங்ஸைப் போல் பார்த்தது இல்லை. அதிகமான நெருக்கடி, மிகப்பெரிய போட்டி, சர்வதேச போட்டியில் களமிறங்காத வீரர் இவற்றைக் கடந்து சாதித்துள்ளார் பட்டிதார்