Advertisement

கேசவ் மகாராஜுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!

தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜுக்கு இந்திய வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசளித்துள்ளார். 

Advertisement
கேசவ் மகாராஜுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
கேசவ் மகாராஜுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 05, 2024 • 12:23 PM

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 05, 2024 • 12:23 PM

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. மேலூம் இப்போட்டியுடன் தென் ஆப்பிரிக்க அணியின் டீன் எல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், நேற்று போட்டி முடிந்த உடன் விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜுக்கு பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக ஓய்வு பெற்ற டீன் எல்கருக்கும் விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்தத் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement