
Virat Kohli gifted watch to young player Shubman Gill (Image Source: Google)
கடந்த 2018ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் களமிறங்கிய சுப்மான் கில், அதிரடியாக விளையாடி அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
விராட் கோலி போலவே விளையாடுகிறார் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட சுப்மான் கில், சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் விருதை 3 முறை வென்றார்.
இதனையடுத்து ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடிய சுப்மான் கில்லுக்கு, இந்திய டெஸட் அணியில் இடம் கிடைத்தது. கடினமான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மான் கில், 45,30,50,31,7,91 என ரன் குவித்தார். இதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தாலும் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார்.