ரச்சின் ரவீந்திராவிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டாரா விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காணொளி வைரலாகியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலமையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரை எதிர்கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி நேற்று சென்னை சேப்பாகத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியானது அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இதில் அனுஜ் ராவத் 48 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Trending
அதப்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தனது அறிமுக போட்டியிலேயே ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இப்போட்டியில் 17 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 37 ரன்களை விளாசி கரண் சர்மா தலைமையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Kohli giving send off to young Rachin Ravindra who literally played better than him. What a shameful guy #rcb #csk #MSDhoni
— om rajpurohit (@Omrajguruu) March 22, 2024
#CSKvRCB #Kohli #viratkohli pic.twitter.com/xPugFm2klE
இந்நிலையில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆக்ரோஷமான கோண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இக்காணொளியானது இணையத்தில் வைரலானது. அதேசமயம் இளம் வீரரிடம் அனுபவம் வாய்ந்த வீரரான விராட் கோலி இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொள்ளலாம என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now