Advertisement

தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்

Advertisement
Cricket Image for தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை!
Cricket Image for தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை! (Virat Kohli (Image Source: Google))
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 29, 2021 • 06:26 PM

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடர் நேற்று புனே மைதானத்தில் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில்
இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி
கைப்பற்றி அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 29, 2021 • 06:26 PM

இந்திய அணி சார்பாக தவான் 67 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களையும், பண்ட் 78
ரன்கள் குவித்து அசத்தினார்கள். அதன்பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
விளையாடிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தாலும் மலான் மற்றும்
சாம் கரண் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில்
வந்தது. வெற்றிக்கு முக்கியமான அந்த கடைசி வரை தமிழக வீரரான நடராஜன் வீசினார்.

அந்த ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மார்க் வுட் ரன் அவுட்டாக
போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. எனினும் மீதமுள்ள 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 5
ரன்கள் மட்டுமே சென்றதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெஸ்ட் தொடர், டி20 தொடர், ஒருநாள் தொடர் என அனைத்தையும் இந்திய அணி
தன் வசப்படுத்தியது.

 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். அந்த
சாதனையானது, மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து இந்திய அணியின்
கேப்டனாக 200 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். இதன் மூலம் இந்திய அணியை
அதிக போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியவர் என்ற பட்டியலில் மூன்றாவது இடத்தில் கோலி
முன்னேறியுள்ளார். மேலும் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள விராட் கோலி 127
போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியும் தேடித்தந்துள்ளார்.

இந்த பட்டியலின் முதலிடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 332
போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 178 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அதே போல முன்னாள் கேப்டன் அசாருதீன் 221 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 121
போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். இந்த பட்டியலில் 4வது இடத்தில் பிசிசிஐ
தலைவரும் முன்னாள் கேப்டன் கங்குலி 195 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளது
குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement