
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி நிர்ணயித்த 177 என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மாவின் அரைசதம் மற்றும் சூர்யகுமார் யாதவின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 28 ஓவர்களில் வெற்றி கிடைத்தது.
ஆனால் இந்த போட்டியில் விராட் கோலி தான் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். நேற்றைய போட்டியில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் வெறும் 8 ரன்களுக்கு மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு அவர் காட்டிய ஆக்ரோஷம் தான் காரணம்.
விராட் கோலிக்கு தொடக்கத்திலேயே பவுன்சர் பந்துகளாக போடப்பட்டு சோதிக்கப்பட்டன. அதனால் அவர் முதல் 2 பந்துகளில் தொடர்ந்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் அதனையே வியூகமாக அமைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், கோலியின் ஆக்ரோஷத்தை தூண்டி அடுத்தடுத்து பந்தை நன்கு பவுன்சருக்கு செல்லும்படி போட்டனர்.