Advertisement

விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!

இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார்.

Advertisement
‘Virat Kohli might take retirement after T20 World Cup in Australia’: Shoaib Akhtar
‘Virat Kohli might take retirement after T20 World Cup in Australia’: Shoaib Akhtar (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 16, 2022 • 08:02 AM

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட பலமான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 16, 2022 • 08:02 AM

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு முதுகெலும்பாக பார்க்கப்படுவர் விராட் கோலி தான். 1000 நாட்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வந்த அவரின் காத்திருப்பு ஆசிய கோப்பையில் முடிவுக்கு வந்தது. மேலும் தொடர்ச்சியாக காட்டிய அதிரடியால் 276 ரன்களை குவித்து, ஆசிய கோப்பையில் அதிக ஸ்கோர் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Trending

இந்நிலையில் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி, ஓய்வை அறிவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார். அவர் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

டெஸ்ட் மற்றும் 50 ஓவர் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டும் என்றால் டி20ல் இருந்து ஓய்வு பெற்று தான் ஆக வேண்டும். ஒருவேளை கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால், ஓய்வு முடிவை தான் எடுத்திருப்பேன். எப்போதுமே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் ஒரு வீரர் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் 104 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 38 அரைசதங்களுடன் 3,584 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement