
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18அவது சீசன் இறுதிக்கட்டை எட்டியுள்ளது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகள் ஒருவார காலம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் 58ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பெங்காளூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் நிலையில் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.