
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி! (Image Source: Google)
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் ஆர்பிசியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
13000 டி20 ரன்கள்