
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்திய அணியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளது விராட் கோலியின் கம்பேக்கை பார்ப்பதற்காக தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பாமல் ஓய்வுக்கு சென்ற கோலி, நேரடியாக ஆசிய கோப்பையில் வருவேன் எனக்கூறி சென்றார். இதில் ஒருவேளை சொதப்பினால் டி20 உலகக்கோப்பையில் இருந்தே அவர் விலகும் சூழலும் உருவாகும்.
இந்நிலையில் தனது கடினமான சூழல் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், “ஒரு விளையாட்டு வீரருக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வரும்போது மனரீதியாக நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் நாம் பலமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இனி வரும் வீரர்கள், உடற்தகுதி நன்றாக வைத்துக்கொள்வது மற்றும் மீண்டு வருவதற்கு தொடர் முயற்சிகளை மட்டும் வைத்திருந்தால், சிறந்த விளையாட்டு வீரராக இருப்பார்.