ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து விலகிய தோனிக்கு விராட் கோலி வாழ்த்து!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக விளங்கிய தோனி, தற்போது கேப்டனாக தனது இறுதி முடிவுரையை எழுதிவிட்டார். ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தோனி எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் ஏலம் முதல் முறையாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ஆறரை கோடி ரூபாய் கொடுத்து தோனியை ஒப்பந்தம் செய்தது. அதற்கு ஏற்றார் போல் தோனி முதல் சீசனிலேயே இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே அணியை அழைத்து சென்றார்.
Trending
அதன் பின்னர், 2010 ஆம் ஆண்டு பலமான சிஎஸ்கே அணியை உருவாக்கிய தோனி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று காட்டினார். பின்னர் அடுத்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிஎஸ்கே அணி, 2012ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே அணியை அழைத்து சென்றார்.
மும்பையின் மறுமலர்ச்சிக்கு முன்பு வரை சிஎஸ்கே தான் டாப் கிளாஸ் அணியாக இருந்தது. மும்பையின் அசுர வளர்ச்சிக்கு பிறகும் கூட 2020ஆம் ஆண்டு தவிர தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ அணி தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி ஒரு சகாப்தமாகவே விளங்கியது.
இதனிடையே தோனியின் கேப்டன் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, “சிஎஸ்கே கேப்டனாக உங்களது பயணம் மகத்தானது. தோனியின் சிஎஸ்கே கேப்டன் அத்தியாயத்தை ரசிகர்கள் மறக்கவே முடியாது. என்றும் மரியாதையுடன்” என்று ஹேர்டின் எமோஜியுடன் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now