Advertisement

விராட் கோலியை பாரட்டிய நிக்கோலோ கேப்பிரியணி!

அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பையிலும் 2028 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவின் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரின் இயக்குனர் நிக்கோலோ கேப்பிரியணி பெருமதித்துடன் தெரிவித்துள்ளார். 

Advertisement
விராட் கோலியை பாரட்டிய நிக்கோலோ கேப்பிரியணி!
விராட் கோலியை பாரட்டிய நிக்கோலோ கேப்பிரியணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 16, 2023 • 07:52 PM

உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தொடர் முயற்சிகளால் ஒரு வழியாக கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் 128 வருடங்கள் கழித்து முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்படுவதாக மும்பையில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 16, 2023 • 07:52 PM

கடைசியாக 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் விளையாடப்பட்ட கிரிக்கெட் அதன் பின் பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டுகளுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2028 ஒலிம்பிக்கில் ஐசிசியின் தொடர் முயற்சிகளால் ஸ்குவாஷ், பேஸ்பால் உள்ளிட்ட புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது ரசிகர்களையும் வல்லுனர்களையும் முன்னாள் வீரர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Trending

அதை விட அந்த அறிவிப்பில் கிரிக்கெட் என்பதை தெரிவுபடுத்துவதற்காக உலகில் நிறைய தரமான நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும் இந்தியாவின் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் கமிட்டி பயன்படுத்தியுள்ளது இந்திய ரசிகர்களை பெருமைப்படுத்தும் அம்சமாக அமைந்துள்ளது. இருப்பினும் 25,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75-க்கும் மேற்பட்ட சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வரும் விராட் கோலியின் படத்தை ஒலிம்பிக் கமிட்டி பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை என்றும் சொல்லலாம்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பையிலும் 2028 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவின் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரின் இயக்குனர் நிக்கோலோ கேப்பிரியணி பெருமதித்துடன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவரி, “2.5 பில்லியன் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் 2ஆவது விளையாட்டான கிரிக்கெட்டை நாங்கள் ஆர்வத்துடன் வரவேற்கிறோம். அமெரிக்காவில் ஏற்கனவே மேஜர் லீக் போன்ற தொடர்களால் கிரிக்கெட்டை வளர்க்கும் வேலைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இங்குள்ள மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இங்கே என்னுடைய நண்பர் விராட் கோலி இருக்கிறார்.

அவர் சமூக வலைதளங்களில் 340 மில்லியன் ரசிகர்களால் பின்பற்றப்படும் உலகின் 3ஆவது பெரிய விளையாட்டு வீரராக இருக்கிறார். இது லேப்ரோன் ஜேம்ஸ், டைகர் வுட்ஸ், டாம் ப்ராடி ஆகியோரை பின்பற்றும் ரசிகர்களை விட அதிகமாகும். இது கிரிக்கெட் சமூகத்தின் வெற்றியான தருணமாகும். ஏனெனில் இது கிரிக்கெட் பாரம்பரிய நாடுகளுக்கு அப்பால் வளர உலக அரங்கில் காண்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement