ஐபிஎல் 14ஆவது சீசன் 39ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 165/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, கிளென் மேக்ஸ்வெல் 56 ரன்கள் சேர்த்தார்கள்.
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய மும்பை அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 43 (28), குவின்டன் டி காக் 24 (23) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். அடுத்துக் களமிறங்கிய அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே அடித்தார்கள். குறிப்பாக, அந்த அணி வெறும் 30 ரன்களுக்கு 8 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து, 18.1 ஓவர்கள் முடிவில் 111/10 ரன்கள் சேர்த்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
ஆர்சிபி அணித் தரப்பில் ஹர்ஷல் படேல் சிறப்பாக பந்துவீசி ஹார்திக் பாண்டியா,பொல்லார்ட், ராகுல் சஹார் ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பி, ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால்தான், மும்பை விரைவாக ஆல்-அவுட் ஆனது.