
இந்திய அணியில் நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் சமீப காலங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் தற்போது இந்திய அணியில் சட்டென நீக்கமுடியாத அளவுக்கு ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் பட்டைய கிளப்பும் பேட்டிங்க்கை வெளிப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து 500 ரன்களை குவித்து வருகிறார்.
குறிப்பாக கடந்த சில வருடங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் பேட்டிங்கில் மலைபோல ரன்கள் குவித்த போதிலும் இதர வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட தவறிய காரணத்தால் அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை.
அந்த சமயத்தில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் புதிய முழுநேர டி20 கேப்டனாக ரோஈத் சர்மா பொறுப்பேற்றதை அடுத்து துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டார். அதன்பின் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட விராட் கோலிக்கு பதில் புதிய ஒருநாள் கேப்டன் ரோஈத் சர்மா நியமிக்கப்பட்டபோது ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்.