டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி!
டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் விராட் கோலி.
Trending
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “7 ஆண்டுகளாக கேப்டனாக என் பணியை சிறப்பாக செய்தேன். அனைத்து நல்ல விசயங்களுக்கும், ஒரு முடிவு இருக்கும்.அது போல் கேப்டன் பொறுப்பிலிருந்த தற்போது ராஜினாமா செய்கிறேன்.
இந்த பயணத்தில் பல ஏற்றம், இறக்கங்களை கண்டுள்ளேன். ஆனால் எப்போதும் என் தன நம்பிக்கையை விட்டது இல்லை. இந்திய அணிக்காக 120 சதவீதம் என் முழு ஆற்றலுடன் வெற்றிக்காக உழைத்துள்ளேன்
இத்தனை ஆண்டுகள் எனக்கு கேப்டனாக வாய்ப்பு வழங்கிய பிசிசிஐக்கு நன்றி. பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்த்ரி மற்றும் மற்ற நிர்வாகிகள், ஆதரவு வழங்கிய வீரர்களுக்கும் நன்றி. முக்கியமாக என்னுடைய கேப்டன் தோனிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
என்னை நம்பி, இவ்வளவு பெரிய பொறுப்பை அவர் தான் எனக்கு வழங்கினார். இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் ” என குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலியின் இந்த திடீர் முடிவினால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வி தற்போது ரசிகர்களை சூழ்ந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now