
Virat Kohli Returns Home After IPL 2021 Gets Postponed (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலியும் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். விராட் கோலி மற்றும் அவரது அனுஷ்கா சர்மா ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
முன்னதாக கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பணிகளை இருவரும் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அனுஷ்கா சர்மா தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் இதனை தெரிவித்துள்ளார்.