ஐபிஎல் 2025: ஆர்சிபி அணி முகாமில் இணைந்த விராட் கோலி - காணொளி!
எஞ்சிவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூருவில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் முகமில் இணைந்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூரு வந்தடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் பெங்களூருவில் உள்ள ஆர்சிபி வீரர்கள் முகாமில் இணைந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் விளையாடும் முதல் ஐபிஎல் போட்டி இதுவாகும்.
இத்தகைய சூழ்நிலையில், அவர் களத்தில் இறங்குவதற்காக ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் இந்த சிறந்த பேட்ஸ்மேனை ஒருநாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ரசிகர்களால் காண முடியும் என்பதால், அவர் மைதானத்தில் விளையாடுவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Virat Kohli at Team Hotel, Bengaluru
- Virat Kohli has reached Bengaluru pic.twitter.com/lujiZnrBkqmdash; Virat Kohli Fan Club (Trend_VKohli) May 15, 2025இந்த சீசனில் விராட் கோலியின் ஃபார்ம் அபாரமாக இருந்துள்ளது. இத்தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடிவுள்ள கோலி 7 அரைசதங்களுடன் 505 ரன்களைச் சேர்த்து அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளார். ஆர்சிபி குறித்து பேசினால் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அந்த அணி 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது, மேலும் அந்த அணி ஒரு வெற்றியைப் பதிவுசெய்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், மயங்க் அகர்வால், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி
Win Big, Make Your Cricket Tales Now