
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையேயான மோதலும் ஒன்று. அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருந்தபோது விராட் கோலி கேப்டனாக இருந்தார். அந்த சமயத்தில், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு நிர்வகித்தது.
அந்த சமயத்தில், அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையே கடும் மோதல் இருந்துவந்தது. அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தினமும் விராட் கோலி தனக்கு மெசேஜ் செய்ததாக வினோத் ராய் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் சச்சின் - கங்குலி - லட்சுமணன் அடங்கிய கிரிக்கெட் நிர்வாகக்குழு இந்த விவகாரத்தை கோலி - கும்ப்ளே ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரித்து, கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் நீடிக்கலாம் என்றபோதும், கும்ப்ளே பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விலகினார். அதன்பின்னர் தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.