
இந்தியாவில் நடைபெற்று முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்களது முதல் சமபியன் பட்டத்தை வென்றது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் கைப்பற்றப்பட்ட முதல் கோப்பையும் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதற்குமுன் ஐபிஎல் தொடரில் 16 சீசன்களில் விளையாடியுள்ள ஆர்சிபி ஆடவர் அணியால் இதுநாள் வரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அந்த கலங்கத்தை தற்போது ஆர்சிபி மகளிர் அணி நீக்கியுள்ளது.
இந்நிலையில் கோப்பையை வென்ற ஆர்சிபி மகளீர் அணிக்கு அநத அணி நிர்வாகம் சார்பில் நேற்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவும், ஆர்சிபி அன்பாக்ஸ் விழாவும் நடத்தப்பட்டது. இதில் ஆடவர், மகளிர் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர் அணி வீரர்கள் கோப்பையை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.